வறட்சி ஏற்பட்டால் சாமாளிக்க பண்டைய கால நெல் இனம் !

Thursday, March 2nd, 2017

இலங்கையின் பண்டைய காலத்தில் பயிரிடப்பட்டதாக கூறப்படும் நெல் ரகம் ஒன்றை வெற்றிகரமாக பயிரிட்டுள்ளதாக நுவரெலியா சாந்திர விகாரையின் விகாராதிபதி மொரபே குசலஞான தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வறட்சி ஏற்பட்டால், அதனால் ஏற்படும் உணவு தட்டுப்பாட்டை இந்த நெற் செய்கை மூலம் போக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்று வருடங்கள் ஆயுள் கொண்ட இந்த நெற் பயிருக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நீர் தேவைப்படும். ஒரு நெற் பயிரில் மாத்திரம் வருடத்திற்கு 12 கிலோ அரிசியை அறுவடை செய்ய முடியும். நாட்டில் காணப்படும் அரிசி பற்றாக்குறையை போக்க இதனை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறானும் விஞ்ஞான ரீதியில் மேற்கொண்ட ஆய்வில் இது நெல் வகை அல்ல அது தானிய வகைக்குரியது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வறண்ட வலயங்களில் பகுதியில் பல காலத்தில் இருந்து இந்த தானியம் சேனைகளில் பயிரிடப்பட்டு வந்துள்ளதாகவும் பலாங்கொடை நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அமீதா பெந்தோட்ட தெரிவித்துள்ளார்.

الارز

Related posts: