வர்த்தமானி அறிவிப்புகளுக்கு அமைச்சரவை அனுமதி!
Friday, May 29th, 2020எரிபொருள் விலைக்காக சுங்க கூடுதல் கட்டணத்தை விதிப்பதற்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவால் இந்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரச பெற்றோலிய உறுதிப்படுத்தல் நிதி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் திறைசேரி அதிகாரி குழுவொன்றின் கண்காணிப்பில் இந்த நிதி முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்கால திட்டம் ஒன்றின் கீழ் எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையில் உள்ள கடனை செலுத்துவதன் மூலம் பொது மக்களுக்கு நீண்டகால நிவாரணத்தை வழங்கக்கூடிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Related posts:
முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடல் நாடாளுமன்றத்தில்!
நாட்டை முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் ம...
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மேல் மாகாணம் அதிக பங்களிப்பு!
|
|