வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள்: 15 பேர் கைது

வர்த்தக நிலையங்கள் மற்றும் மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு தற்பொழுது அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது ஊடகவியலார் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, இனங்களுக்கெதிராக வன்முறையை தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பில் இதுவரை 21 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புனர்வாழ்வு பெறாத 275 போராளிகள் உள்ளனர்!
புத்தாண்டின் பின்னர் அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறி...
நவம்பர் 1 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!
|
|