வருட இறுதிக்குள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு – மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, March 3rd, 2021

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத அனைவருக்கும் இவ்வருட இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் தேசிய அடையாள அட்டை இல்லாத அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் காலம் நெருங்கும் போதுதான் அடையாள அட்டை நினைவுக்கு வரும். அதன்போது கிராம அதிகாரிகளிடம் சென்று தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்துவிட்டு மீண்டும் மறந்துவிடுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத அனைவருக்கும் இவ்வருட இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: