வருடாந்தம் 5000 பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு!

இலங்கையில் வருடமொன்றிட்கு 5000 சிறுநீரக நோயாளர்கள் புதிதாக இணங்காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறுநீரக நோயிற்கு பிரதான காரணம் சுத்தமற்ற குடிநீர் என்பதால், இந்த குடிநீர்பிரச்சினையை ஒருவருடத்திற்குள் முற்றாக தீர்ப்பதற்கு நடவடிக்கைஎடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த குடிநீர் பிரச்சினைக்கு சர்வதேச அளவில் ஒத்துழைப்புகள் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – கெலேபோகஸ்வௌ பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும்நோக்குடன் அமைக்கப்பட்ட புதிய நீர் வடிகட்டும் இயந்திரத்தை நேற்றைய தினம்திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையிலும் 5000 ரூபா தாளுக்கு ஆபத்தா?
மதுபோதையில் மோட்டார் வாகனம் ஓட்டியவருக்கு தண்டம்!
இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர் - கோபா குழுவில் ...
|
|