வருடத்திற்கு 5 ஆயிரம் மில்லியன் டொலருக்கு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு ஏன் பல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை முன்வைக்க முடியாது? – ஜனாதிபதி செயலாளர் சுட்டிக்காட்டு!

Wednesday, September 15th, 2021

நாங்கள் தற்போது  இறக்குமதிக் கட்டுப்பாடுகளை மீறி செயற்படவில்லை என்றும் எங்கள் கொள்கை கட்டமைப்பை பாதிக்காத வகையில் அந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் பேராசிரியர் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் மேலும் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் வகையில் பேராசிரியர் ஜயசுந்தர இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் நாம் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய இடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் எரிபொருள். எரிபொருள் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த நாங்கள் விலைக் கொள்கையைப் பயன்படுத்த வேண்டும்.

இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை எந்தப் பங்கீடும் இன்றி நுகர்வோருக்கு வழங்குவதற்காக நாம் விரைவில் புதுபிக்க ஆற்றலுடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வருடத்திற்கு 5 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலரை எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு ஏன் பல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை முன்வைக்க முடியாது? இது செய்யப்பட வேண்டிய ஒன்று  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் இறக்குமதியின் ஒரு பகுதி ஏற்றுமதிக்காகப் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும், நாம் ஐடி பொருளாதாரத்தை உருவாக்கப் போகிறோம் என்றால், தொடர்புடைய அனைத்து இறக்குமதிகளையும் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி, மத்திய வங்கியின் நாணயச் சபை மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் எங்கள் ஏற்றுமதியை இரண்டு, மூன்று மற்றும் நான்கு பில்லியன்களாக அதிகரிக்க வேண்டும் என்றும் நமது ஏற்றுமதியை வளர்ச்சியை நோக்கித் திருப்ப வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி,  50 பில்லியன் ரூபா பசுமை நிதி வசதியை அறிமுகப்படுத்த மத்திய வங்கியிடம் முன்மொழிந்தேன்.  நம் நாட்டில் உள்ள வங்கிகள் அதை ஊக்குவிக்க வேண்டும். வங்கித்துறை நிதித்துறையை எங்கு திருப்புகிறது என்று ஒரு திருப்புமுனையைக் கொடுக்க  மத்திய வங்கி அதை வழிநடத்த வேண்டும்.

இல்லையெனில், நாட்டின் அன்றாட விவகாரங்களை மத்திய வங்கியால் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவுடன் மத்திய வங்கிக்கு ஒரு கடிதம் அனுப்பியதாகவும் அதற்கு அவ்வங்கி பதில் வழங்கும் என்று தான் நம்புவதாகவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: