வரி அதிகரிப்பு: அச்சுவேலி பொதுச்சந்தையில் மீன் வியாபாரிகள் பாதிப்பு!

அச்சுவேலி பொதுச்சந்தையில் கடலுணவுக்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டு அறவிடுவதனால் மீன்விற்பனையில் ஈடுபடும், சைக்கிள் வியாபாரிகள் சந்தை வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கலைமதி மீனவர் அபிவிருத்தி சங்கத்தினால், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வலி. கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
விற்பனை செய்யும் இடத்துக்கு 100 ரூபாய், கொண்டு வரப்படும் மீன்களுக்கு தலா 10 ரூபாய் தொடக்கம் 15 ரூபாய் வரை வரி செலுத்துமாறு வற்புறுத்தப்படுவதாகவும், அப்படி செலுத்தாதவர்கள், சந்தையில் மீன் விற்பனை செய்யவேண்டாம் என அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்த மகஜர் கடிதத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல கிலோமீற்றர் தூரத்தில் இருந்து வரும் மீன் வியாபாரிகள், பெரிதும் பாதிக்கப்படுவதுடன், தொழில் இன்றி முடங்கியுள்ளனர். இதனால் அச்சுவேலி பொதுச்சந்தையில் மீன்வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
பிரதேச சபையின் நடமுறைகளுக்கு ஊடாக மீன்களுக்கான வரி அறவீடு நடமுறைப்படுத்தப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இவ் விடயத்தில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
|
|