வரிவிலக்கு வாகனம் கோரும் பாடசாலை அதிபர்கள்!

வரி விலக்களிப்பு வாகன அனுமதிப்பத்திரத்தை பாடசாலை அதிபர்களுக்கும் பெற்று தருமாறும் குறித்த கோரிக்கை அடங்கிய கடிதமானது இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-2006 சுற்று நிருபத்திற்கு அமைய அதிபர் பதவியானது பதவிநிலை உத்தியோகத்தர்தரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம்சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் குறித்த வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டமானது 1998ஆம்ஆண்டிலிருந்து அதிபர்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த நல்லாட்சியிலாவது அதிபர்களுக்கு குறித்த வாய்ப்பு மீண்டும்பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
வெளிநாட்டு தபால்கள் மற்றும் பொதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் - தபால் மா அதிபர் அறிவிப்பு!
இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் - கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செ...
|
|