வரட்சியான காலநிலை: ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு!

Monday, January 16th, 2017
வரட்சியான காலநிலை காரணமாக நாடுமுழுவதும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை 9 மாவட்டங்களுக்கு தாக்கம் செலுத்துவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடுமுழுவதுமுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமானது குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையகத்தில் நீர் உற்பத்தியாகும் பகுதிகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: