வயோதிபரை மோதிய சாரதிக்கு பிணை!

Saturday, April 30th, 2016

சைக்கிளில் சென்ற வயோதிபரை பட்டா ரக வாகனத்தினால் மோதிவிட்டு தப்பி சென்ற வாகனச் சாரதியை 50 ஆயிரம் ரூபாய் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி – மனோகரச் சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றது.

இவ்விபத்தில் ஐ.இராஜேந்திரன் (வயது 76) என்பவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதியை ஐந்து நாட்களின் பின்னர் கடந்த திங்கட்கிழமை (25) யாழ். நகர பகுதியில் வைத்து கைது செய்த யாழ்ப்பாண பொலிஸார் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் 50 ஆயிரம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்தார்.

Related posts: