வட மாகாண சபைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!

வட மாகாண சபைக்கு எதிராக உயர்நீதிமன்றில் நேற்று (26)மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான வட மாகாண சபையின் முன்மொழிவுகளுக்கு எதிராக சட்டத்தரணி அருண லக்சிறி என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன..
இந்த மனுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான வட மாகாண சபையின் முன்மொழிவுகள் தொடர்பில், குறித்த இரு கட்சிகளிடமும், வட மாகாண முதலமைச்சரிடமும் விசாரணை நடத்த வேண்டுமன அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும், மொழி ரீதியாக நாடு பிரிக்கப்படவேண்டும், சமஷ்டி முறைமையிலான கூட்டாட்சியை வலியுறுத்தியும் வட மாகாண சபை பிரேரணை நிறைவேற்றியிருந்தது.
இந்த பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி, பிவிதுறு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|