வட மாகாணத்தில் 54ஆயிரத்து 532 பெண் தலமைத்துவக் குடும்பங்கள்!

Monday, October 10th, 2016

வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் 54ஆயிரத்து 532பெண் தலமை தாங்கும் குடும்பங்கள் வசிப்பதாக யாழ்.மகளிர் அபிவிருத்தி நிலையம் மேற்கொண்டுள்ள புள்ளி விபர கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 29ஆயிரத்து 378 குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 5ஆயிரத்து 802 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தில் 6ஆயிரத்து 294 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6ஆயிரத்து 170 குடும்பங்களும் காணப்படுவதாக குறித்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் பெறப்பட்ட தரவுகளை ஆதாரமாகக் கொண்டு மேற்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகளிர் அபிவிருத்தி நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Sivapuram-Vavuniya-e1435274815403

Related posts: