வட்டுக்கோட்டை  இளைஞன் மீது வாள்வெட்டு: சந்தேக நபர்கள் பொலிஸில் சரண்!

Saturday, October 8th, 2016

அடிகாயம் மற்றும் வாள்வெட்டுக்கிலக்காகி ஆபத்தான நிலையில் குடும்பஸ்த்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வட்டுக்கோட்டை மாவடி குழிப்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜானச்சந்திரன் றயிந்தன் (வயது -30) என்ற குடும்பஸ்த்தரே பாதிப்புக்குள்ளானார்.

பாதிக்கப்பட்ட நபரின் மனைவியின் முறைப்பாடு மற்றும் படுகாயமடைந்தவரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் வட்டுக்கோட்டை குற்றத்தடுப்பு உப பரிசோதகர் தலைமையிலான குழுவினர் விசாரணையை மேற்கொண்டனர்.

இந் நிலையில் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 4பேர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 4பேரையும் இன்று மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

valvedu-2-680x365

Related posts:


இடைநிறுத்திய பணி இன்றுமுதல் மீண்டும் முன்னெடுக்கின்றது – துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு எ...
வாக்காளர் அட்டைகளை அச்சிட தயாராகுமாறு அச்சகப் பிரிவு - பணிப்புரை விடுத்துள்ள ஆணைக்குழு!
காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் - பொதுமக்கள் பாதுகா...