வடமாராட்சி பகுதியில் பிறப்பு வீதம் குறைவு சுகாதார வைத்திய அதிகாரி கவலை!

வடமராட்சியில் தற்போது பிறப்பு வீதம் குறைடைந்து வருகின்றது என பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி ஜி.செந்தூரன் கவலை வெளியிட்டுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத, ஊள்ளுராட்சி மாத பரிசளிப்பு விழாவும் நேற்று முன்தினம் நடைபெற்றபோது அவர் மேண்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எமது பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதங்கேணிப் பகுதியில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய சுகாதார வைத்திய அதிகாரி மணிமனையின் கீழ் இயங்கவுள்ளது. அதேபோல் பருத்தித்தறை பிரதேச சபையின் கீழ் உள்ள அப்பகுதியும் மருதங்கேணி பிரதேச சபையாக பிரிக்கப்படும் இடத்து பெருமளவான அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். முன்பள்ளிப் பருவத்திலேயே சிறார்களின் வளர்ச்சி தூண்டப்படுகின்றது. அதற்கு சிறார்களின் ஆரோக்கியம் பேணுவதில் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் வடமாராட்சி பகுதியில் அண்மைய காலங்களாக பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது என்ற கவலையையும் அவர் வெளியிட்டார்.
Related posts:
|
|