வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நூறாவது நாளில் வாய்களைக் கட்டிப் போராட்டம் 

Wednesday, June 7th, 2017

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக  வேலைவாய்ப்புக் கோரி நடாத்தி வரும் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம்  இன்று செவ்வாய்க்கிழமை(06) நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று முற்பகல்-11 மணியளவில் தமது வாய்களைக் கறுப்புத் துணியால் கட்டியவாறு வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.

வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத மத்திய, மாகாண அரசாங்கங்களைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகள் பல்வேறு சுலோகங்களைக்  தாங்கியவாறு மத்திய, மாகாண அரசுகளுக்கெதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Related posts: