வடமாகாண ரீதியில் நடத்தப்படும் ஆங்கில எழுத்துக்கூட்டல் போட்டி ஆரம்பம்!

மறுமலர்ச்சி மன்றத்தினால் வடமாகாண ரீதியில் நடாத்தப்படும் ஆங்கில எழுத்துக்கூட்டல் (சொற்திறன்) போட்டியில்( Spelling Bee Sri Lanka – 2017) பங்குபற்ற விண்ணப்பித்த மாதகல், பண்டத்தரிப்பு, இளவாலை, அளவெட்டி, சண்டிலிப்பாய், சங்கானை, அராலி, வட்டுக்கோட்டை, சித்தன்கேணி, சுழிபுரம், மூளாய், காரைநகர் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்களுக்கான முதலாவது சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் முற்பகல்-08 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை காலையடி, பண்டத்தரிப்பு எனும் முகவரியில் அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி போட்டியில் ஒரே தடவையில் ஆகக் கூடியது 25 மாணவர்கள் கலந்துகொள்வதுடன், அவர்களால் எழுமாற்றாக எடுக்கப்படும் இலக்கங்களிற்கேற்ப பட்டியலிலிருந்து சொல் நடுவர்களில் ஒருவரால் வாய்மூலம் கேட்கப்படும். அச் சொல்லிற்குரிய எழுத்துக்களைப் போட்டியாளர் சரியான முறையில் எழுத்துக் கூட்டிச் சொல்லுதல் வேண்டும். எழுத்துக் கூட்டுவதற்கு ஆகக்கூடியது 30 செக்கன்கள் நேரம் வழங்கப்படும். தவறும் பட்சத்தில் இன்னொரு சந்தர்ப்பம் மாத்திரமே சரியாக எழுத்துக்கூட்டிச் சொல்வதற்காக வழங்கப்படும்.
போட்டிக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆகவே, போட்டியாளர்கள் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குத் தவறாது சமூகமளித்து ஏற்பாட்டாளர்களிடம் தங்களின் வரவைத் தெரிவிப்பதன்மூலம் இப்போட்டியில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|