வடமாகாணத்தைச் சேர்ந்த நால்வருக்கு கலாநிதி, முதுமாணிப் பட்டங்கள்!

Tuesday, November 28th, 2017

அமெரிக்க உலக பல்கலைக்கழகத்தினால் வடமாகாணத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கலாநிதி மற்றும் முதுமாணிப்பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு கொழும்பு – 7 இலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

தென்னாசிய கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தொழில் தகைமை சார் பட்டமளிப்பு விழாவில் கலாநிதி பட்டங்களை யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கந்தையா சிவராசா, பனை அபிவிருத்தி சபையின் பொது முகாமையாளர் பாலசுப்பிரமணியம் சுதாகரன், ஏஞ்சல் சர்வதேச ஆங்கிலப் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி அம்பிகா ராஜரட்ணம் ஆகியோர் பெறவுள்ளனர்.

முதுமாணி பட்டத்தினை பனை அபிவிருத்தி சபையின் முகாமையாளர் (விரிவாக்கம்) கார்த்திகேசு கோபாலகிருஷ்ணன் பெறவுள்ளார்.

Related posts: