வடமராட்சியில் விளை மீன்களின் பிடிபாடு அதிகரிப்பு !

வடமராட்சி கடற்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் காற்றுடனான காலநிலை நிலவுவதால் விளைமீன்களின் பிடிபாடு சடுதியாக அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொண்டமனாறு அக்கரைக்கடலில் கடந்த சில தினங்களாக விளை மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படுவதால் மீன்பிடி இறங்கு துறைக்கு அருகிலுள்ள மீன்கள் ஏலம் கூறி விற்க்கப்படும் இடத்தில் விளை மீன்கள் தினமும் விற்பனைக்காகக் குவிந்த வண்ணமுள்ளன. கடந்த காலங்களில் வெளிச்சந்தைகளில் விளை மீன் கிலோ 1000 ரூபா வரை விற்பனையாகியது. ஆனால் தற்போது விளைமீன்களின் அளவைப் பொறுத்து கிலோ 250 ரூபா முதல் 350 ரூபா வரை விற்பனையாகிறது.
Related posts:
பொலிஸார் மீது வாள்வெட்டு - மாட்டினர் ரவுடிகள்!
மினுவாங்கொட போன்று மற்றுமொரு கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து - எச்சரிக்கும் இராணுவ தளபதி!
இந்திய அரசு நிதி உதவி - கிழக்கு மாகாணத்தில் சோலார் பேனல்களை நிறுவ நடவடிக்கை!
|
|