வடக்கு மாகாண பொதுச்சேவையின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை!

வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் தரம் 111 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது நவம்பர் மாதம் 2016.11.12ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்பரீட்சைக்காக விண்ணப்பித்த தகைமையுடைய விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டைகள் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரால் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனுமதி அட்டை கிடைக்க பெறாத விண்ணப்பதாரிகள் தாங்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்தமைக்கான சான்றுகளுடன் செயலாளர் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கோ அல்லது 0212219939 என்னும் தொலைபேசி இலக்கத்துடனோ 2016-11-09 ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
எவ்வாறாயினும் அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்பட்ட பின்னரே பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்படுவர் என வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அறிவித்துள்ளார்.
Related posts:
|
|