வடக்கு  நீலங்களின் சமர்:  கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கு வெற்றி!

Sunday, May 15th, 2016

கிளிநொச்சி மாவட்டத்தின்  துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற வடக்கின் நீலங்களின் சமர் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது நேற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சமரின் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

நேற்று முன்தினம் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி களத்தடுப்பை தீர்மானித்து களமிறங்கியது.

இரண்டு நாட்களைக் கொண்டுநடத்தப்பட்ட டெஸ்ட் கடினப்பந்து போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி 35.வது பந்து பரிமாற்றத்தின் நான்காவது பந்துவீச்சில் அணி அனைத்து விக்கற்களையும் இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து துடுப்பாட களமிறங்கிய இந்துக்கல்லூரி அணியினர் பதினாறாவதுபந்து பரிமாற்றத்தின் மூன்றாவது பந்தில் மூன்று விக்கற் இழப்பிற்கு 71ஓட்டங்களை அணி அடைந்த வேளை மழை குறுக்கிட்டமையால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு நேற்றுக் காலை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.

போட்டியில் இந்துக்கல்லூரி அணியினர் மூன்று இலக்கு இழப்பிற்கு 51 வது பந்துப்பரிமாற்ற நிறைவில் 206ஓட்டங்களை பெற்றவேளை தமது வெற்றிக்கு ஓட்டங்கள் போதும் என அணிதலைவரால் தீர்மானிக்கப்பட்டு துடுப்பாட்டம் கிளிநொச்சி மத்திய கல்லூரிஅணிக்கு வழங்கப்பட்டது.

துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்தியகல்லூரி அணி 31 வது பந்து பரிமாற்றத்தின் நான்காவது பந்து வீச்சில் அனைத்து விக்கற்களையும் இழந்து70 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட ஒருஇனிங்ஸ் மற்றும் நான்கு ஓட்டங்களால் இந்துக்கல்லூரி அணி அபார வெற்றியைஈட்டிக் கொண்டது.

ஏழாவது தடவையாக நடத்தப்பட்ட இப்போட்டியில் கடந்த காலத்தில் இரண்டுக்கு இரண்டு என்ற சமநிலை வெற்றியையும் இரண்டு தடவை சமநிலையிலும் முடிவடைந்த இப்போட்டி இவ்வருடத்துடன் மூன்றுக்கு இரண்டு என்ற வெற்றி வீதத்தை இந்துக்கல்லூரி மாற்றி அமைத்துள்ளது.

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக இந்துக்கல்லூரி வீரன் அனுக்சன் தெரிவு செய்யப்பட்டடார். இவர் 84 ஓட்டங்கள் மற்றும் மூன்று விக்கற்றுக்களையும்வீழ்த்தி உள்ளார். சிறந்த பந்து வீச்சாளராக அதே அணியை சேர்ந்த பார்த்தீபன் இரண்டு இனிங்ஸ்களிலும் பதினோரு விக்கற்றுக்களை வீழ்த்திஉள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

Related posts: