வடக்கு உள்ளுராட்சி உதவியாளர்களுக்கான பதவி உயர்வு அடுத்தவாரம்!

Thursday, March 8th, 2018

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி அங்கீகாரத்துக்கு இணங்க வடக்கு உள்ளுராட்சி சபைகளில் கடமையாற்றும் உள்ளுராட்சி உதவியாளர்களுக்கு அடுத்தவாரம் வகுப்பு 1 க்கான பதவி உயர்வுக் கடிதம் வழங்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் 2017.09.29 ஆம் திகதி சுற்றறிக்கை அனுமதிக்கு இணங்க வகுப்பு 2, வகுப்பு 1 க்கு உள்ளுராட்சி உதவியாளர்களுக்கு பதவி உயர்வுக்கு அனுமதி கிடைத்தது. இதன்பிரகாரம் 26 உள்ளுராட்சி உதவியாளர்களுக்கு ரிஏ36 சம்பளத் தொகுதியில் வகுப்பு 2 க்கான பதவி உயர்வு கடிதங்களை வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஊடாக அனுப்பி வைத்துள்ளது.

இதேபோல வகுப்பு 1 க்கு ரிஏ382 சம்பள அடிப்படையில் 26 உள்ளுராட்சி உதவியாளர்களுக்குமான பதவி உயர்வுக் கடிதம் அடுத்தவாரம் வழங்கப்படவுள்ளது.

வுடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரெயின் பணிப்புரையின் பேரிலேயே வடக்கில் பணியாற்றும் உள்ளுராட்சி உதவியாளர்களுக்கு 10.05.2014 முதல் வகுப்பு 1 க்கான முதலமைச்சரின் உள்ளுராட்சி அமைச்சு செயலகத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வழங்கப்படவிருந்த பதவி 1 க்கான பதவி உயர்வு உள்ளுராட்சி தேர்தல் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. இவ்வாறு பிற்போடப்பட்ட பதவி உயர்வு கடிதமே அடுத்த வாரம் வழங்க வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts: