வடக்குப் பாடசாலைகளில் ஆசிரியர் சமநிலைப்படுத்தல்!

Friday, December 2nd, 2016

அமைச்சரவையில் அண்மையில் எடுக்கப்பட்ட திர்மானத்தின் பிரகாரம் வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மேலதிக ஆசிரியர்களை சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

எந்தவொரு பாடசாலையிலும் மேலதிகமாக ஆசிரியர்களை வைத்திருக்க முடியாது. அதன் பிரகாரம் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஆசிரியப் பணிக்குழுவை வழங்கவேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வடக்கு மாகாணத் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்களை பற்றாக்குறை காணப்படும் பாடசாலைகளுக்கு நியமிக்க வேண்டும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆகவே வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் செயலாளர் இவ்வருட இறுதிக்குள் ஆசிரியர்கள் சமநிலையை மேற்கொள்ளுமாறு சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

Untitled-1 copy

Related posts: