வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

வடமாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று (18) கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 386 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில் 14 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த 14 பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
விஷேட வட்டிக்கான வைப்பு தொகை அதிகரிப்பு!
மதுபோதையில் சாரதித்துவம்: 8635 சாரதிகள் கைது!
தென் ஆப்பிரிக்காவில் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரிப்பு!
|
|