வடக்கில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் – மாவட்ட ரீதியில் ஆரம்பம்!

Saturday, February 18th, 2017

வடமாகாணத்தில் முதன்முறையாக மகளிர் வன்பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் இப்போது நடைபெறவிருக்கின்றன. வடக்கு மாவட்டங்கள் தனித்தனியாக பயிற்சியளித்து மகளிர் கிரிக்கெட் கழக அணிகளையும் மவட்ட அணிகளையும் தயார் செய்து வைத்திருக்கும் சூழ்நிலையில், மாவட்ட மகளிர் அணிகளுக்கு இடையிலான 1 நாள் இன்னிங்ஸ் ஆட்டங்களைக் கொண்ட – சுற்றுப்போட்டி ஒன்றை ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்றது,

மாவட்ட ரீதியான  ஆட்டங்களைத் தொடர்ந்து அவற்றின் அடிப்படையில் மாகாண அணிகள் தெரிவு செய்யப்பட்டு, மாகாண அணிகளுக்கு இடையிலான சுற்றுப்போட்டி ஆட்டங்கள் நடைபெறும் என்றும் இந்த மாவட்ட, மாகாணப் போட்டிகளின் அடிப்படையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தெரிவு செய்யப்படும் என்றும், ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடமகாணத்தில் உள்ள மாவட்ட மகளிர் அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 3 மாவட்ட அணிகள் பங்கு பற்றுகின்றன. யாழ்ப்பாண மாவட்ட மகளிர் அணி தனியாகவும், கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்கள் ஒரு கூட்டு அணியாகவும், வவுனியா – மன்னார் மாவட்டங்கள் மற்றொரு கூட்டு அணியாகவும் இந்தச் சுற்றுப் போட்டியில் மொதுகின்றன.

கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களின் கூட்டு அணிகளுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அணிக்கும் இடையிலான ஆட்டம் இன்று காலை 9.30மணி முதல் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெறும்

கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களின் கூட்டு அணிகளுக்கும், வவுனியா-மன்னார் மாவட்டங்களின் கூட்டு அணிகளுக்கும் எதிரான ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணி முதல் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறும். யாழ்ப்பாண மாவட்ட அணிக்கும் வவுனியா-மன்னார் மாவட்டங்களின் கூட்டு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் நாளை மறுதினம் காலை 9.30மணி முதல் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டங்களை ஏற்பாடு செய்து அவற்றுக்கான நிதி உதவிகளை வழங்கும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அமைப்பு இந்த ஆட்டங்களில் வீராங்கனைகளின் பெறுபேறுகள், தரங்கள், கிரிக்கெட் ஆளுமை, தர விருத்திக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை நேரில் ஆராய்ந்து மதீப்பீடு செய்வதற்காக விசேட பிரதிநிதிகளையும் ஆட்டம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

4

Related posts: