வடக்கில் முடக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

வவுனியா சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா சகாயமாதாபுரத்தில் கொரோனா தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றயதினம் குறித்த கிராமத்தில் முடக்கல் நிலை கடுமையாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களிடம் நேற்றயதினம் சுகாதாரபிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின் பிரகாரம் மேலும் 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதேவேளை வவுனியா சுந்தரபுரம், மகாறம்பைக்குளம், தெற்கிலுப்பைக்குளம், தோணிக்கல் போன்ற பகுதிகளில் 8 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இன்று மாத்திரம் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன மத ரீதியான வன்முறைகளை தடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு!
மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து சேவையை வழங்க துரித நடவடிக்கை - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தில...
வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் - அமைச்சர் ...
|
|
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க “ஜெய்க்கா” தீர்மானம் - ஜனாதிபதி கோட்டா...
இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட 24 பன்நாட்டு நிறுவனங்கள் விருப்பம் - வலுசக்தி அமைச்...
இரத்மலானை, பலாலி விமான நிலையங்கள் திட்டமிட்டபடி பயன்படுத்தப்படவில்லை -சிவில் விமான சேவைகள் அமைச்சர் ...