வடக்கில் கடமைபுரிந்துவரும் வரும் இரு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கையூட்டல் குற்றச்சாட்டு!

Monday, January 2nd, 2017

வடக்கில் கடமையாற்றி வரும் இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கையூட்டல் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கில் கடமையாற்றி வரும் துணை பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

துணை பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கையூட்டல் பெற்றுக் கொண்டமை மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை குறித்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரும், பிரதேச வர்த்தகர்களும் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்திற்கும், வடக்கிற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமாரவிற்கும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு வடக்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் மா சிங்கவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் மா சிங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

குறித்த துணைப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரிடமும் பிரதேச வர்த்தர்களிடமும் இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் பணம் என்பனவற்றை கையூட்டலாக பல தடவைகள் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊழல் மோசடிக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு துணைப் பொலிஸ் அத்தியட்சகரும் வடக்கில் இதேவிதமாக கையூட்டல் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

cash

Related posts: