வடக்கில் அனைத்து புத்தர் சிலைகளும் அகற்றப்படவேண்டும் – “யாழ்ப்பாண அடையாளம்” அமைப்பு!

வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல புத்தர் சிலைகளும் அகற்றப்பட வேண்டுமென்று “யாழ்ப்பாண அடையாளம்” எனும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த சிவில் சமூக அமைப்பினால் சர்வதேசத்தை நோக்கி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையிலேயே புத்தர் சிலைகளை அகற்றும் விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுமார் 30 பக்கங்கள் கொண்ட விரிவான விளக்கங்களுடன் தமது வேண்டுகோளை முன்வைத்துள்ள குறித்த “யாழ்ப்பாண அடையாளம்” எனும் சிவில் சமூக அமைப்பானது, வடக்கி்ல் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகள் உடனடியாக அகற்றிக் கொள்ளப்பட வேண்டும் என்று பிரதானமாக வலியுறுத்தியுள்ளது.
Related posts:
நெடுங்கேணிப் பொதுச் சந்தைக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை!
2017 மே மாதம் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் - ஜனாதிபதி!
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 900 முறைப்பாடுகள்!
|
|