வடக்கிலுள்ள 249 பாடசாலைகளுக்கு விரைவில் ஆய்வு கூட உபகரணங்கள்!

Thursday, November 16th, 2017

வசதிகள் குறைவான தரம் 6 தொடக்கம் 11 வரையிலான வகுப்புகளையுடைய 3 ஆயிரம் பாடசாலைகளுக்கு ஆய்வு கூட உபகரணங்களை வழங்க கொழும்பு அரசின் கல்வி அமைச்சுத் தீர்மானித்துள்ளது.

மேல் மாகாணத்தில் 448 பாடசாலைகளுக்கும், மத்திய மாகாணத்தில் 440 பாடசாலைகளுக்கும், தென் மாகாணத்தில் 306 பாடசாலைகளுக்கும், வட மாகாணத்தில் 249 பாடசாலைகளுக்கும், கிழக்கு மாகாணத்தில் 322 பாடசாலைகளுக்கும், வடமேல் மாகாணத்தில் 403 பாடசாலைகளுக்கும், வடமத்திய மாகாணத்தில் 173 பாடசாலைகளுக்கும், ஊவா மாகாணத்தில் 249 பாடசாலைகளுக்கும், சப்ரகமுவ மாகாணத்தில் 410 பாடசாலைகளுக்கும் இந்த உபகரணங்கள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை ஆய்வு கூடங்களில் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய மற்றும் 5 ஆண்டுகளுக்குப் பாவிக்கக்கூடிய அளவிலானதுமான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தச் செயல் திட்டத்துக்காக கல்வி அமைச்சரின் ஆலோசனையின் கீழ் 450 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related posts: