வடக்கின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா !

Saturday, June 25th, 2016

சமுர்த்தி  மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித்  திணைக்களத்தின் ஏற்பாட்டில் “வளமான மக்களின் எதிர்காலம்… நாட்டின் வளர்ச்சி….”   எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று வெள்ளிக் கிழமை (24-06-2016) காலை முதல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

இப் புதிய வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திற்குப்  பிரதம அதிதியாகச்  சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா பிரதம விருந்தினராகக்  கலந்துகொண்டார்.

” சமுர்த்தித் துறையில் வளமான மக்களின் எதிர்காலமும் , சமூக வலுவூட்டல் பின்னடைவு கண்டுள்ள மக்களின் தேவைகளும்”  “சமுர்த்தித் துறையினருக்கான பரிகாரங்களும், நலனோம்புச்  செயற்பாடுகளும்”  போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது சமுர்த்தித் துறைசார்ந்த அதிகாரிகளினால் கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பான ஆலோசனைகளும் அமைச்சரினால் வழங்கப்பட்டன.

நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் மற்றும் சமுர்த்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், மாவட்டச் சமுர்த்திப்பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி  ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள்  மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

d5b3502a-fc1a-4844-8b11-fdb9c93d92cd

Related posts: