வடக்கின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பைச் செய்யத் தயார் – நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் ஆளுநரிடம் உறுதியளிப்பு!
Friday, February 9th, 2024வட மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பைச் செய்யத் தயாராக இருப்பதாக நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens) உறுதியளித்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன், ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யாழின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக உள்ளோம்.
அத்துடன் முதலீட்டு திட்டங்களை ஊக்குவித்து வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான பங்களிப்பை வழங்கவும் தயாராக உள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மத்திய வங்கி விவகாரம் குறித்து ஆராய விஷேட குழு!
புதிய தேசிய வருமான வரி சட்டமூலம் இன்று!
இருதரப்பு அரசியல் ஆலோசனைகளில் வலுவான கூட்டணியை இலங்கை மற்றும் ரஷ்யா மீள உறுதிப்படுத்தல்!
|
|