வங்கியில் வைப்பிலிட கொண்டுசென்ற 18 இலட்சம் கொள்ளை!

Monday, August 22nd, 2016

அம்பலங்கொடையில் பெண் ஒருவரிடமிருந்து 18 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கிக்கு பணத்தினை வைப்பிலிட குறித்த பெண் சென்றவேளையிலே பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த பெண் தனியார் வங்கியிலிருந்து பெற்றுக் கொண்ட பணத்தினை பிரிதொரு வங்கியில் வைப்பிலிடச் சென்ற வேளையிலேயே இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக, அப் பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 வயதுடையான குறித்த பெண், அம்பலங்கொடை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: