லசித் மலிங்க பயணித்த விமானத்தில் இயந்திரக் கோளாறு!

Monday, March 14th, 2016

இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கல்கத்தா நோக்கி செல்லவிருந்த எம்.ஜீ.331 இலக்க விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கத்தா நோக்கி செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 150 இற்கும் அதிகமான யாத்திரிகர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக லசித் மலிங்கவும், இந்தப் போட்டியை பார்வையிடுவதற்காக தினேஸ் சந்திமாலின் மனைவியும் குறித்த விமானத்தில் பயணிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


2020ஆம் ஆண்டு மதுபாவனைக்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளனர் - ...
இன்றுமுதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் - வெளியானது புதிய சுகாதார வழிகாட்ட...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாது ...