றம்புட்டான் பழம் விற்பனையில்!

தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்படும் றம்புட்டான் பழங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சில சந்தைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.
கடந்த சில நாள்கள் தொடக்கம் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு பழம் 10 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. தற்போது சந்தையில் ஓரிரு வியாபாரிகளே கொள்வனவு செய்து விற்பனை செய்வதால் விலை ஆரம்பத்தில் அதிகமாக இருக்குமெனவும் தொடர்ச்சியாகப் பழங்கள் கொண்டு வரப்பட்டால் விலை வீழ்ச்சி ஏற்படலாமெனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
றம்புட்டான் பழங்கள் மே,ஜீன், ஜீலை மாதங்களில் பெருமளவில் அறுவடை செய்யப்படுவதால் அடுத்துவரும் தினங்களில் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்படலாமெனவும் தெரிவித்தனர்.
Related posts:
இலங்கையின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது - மரணமானவர்களின் எண்ணிக்கையு...
யாழ்ப்பாணத்திலும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு – நாடுமுழுவதும் 19 பேர் அடையாளம் !
83% ஆசிரியர் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – விரைவில் பாடசாலைகள்...
|
|