ரேணுகா ஹேரத் காலமானார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ரேணுகா ஹேரத் இன்று (13) அதிகாலை காலமானார்.
மத்திய மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவரான இவர், கண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 72 ஆவது வயதில் காலமானார்.
1945 இல் பிற்நத துணுதிலக முதியன்சலாகே ரேணுகா மெணிக ஹேரத், ஆசிரிய தொழிலில் ஈடுபட்டு வந்ததோடு, 1989 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கத்தில், சுகாதார அமைச்சராகவும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1989 தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை, இலங்கையின் 8, 9, 10 ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த இவர், மீண்டும் 2006 முதல் 2010 காலப் பகுதியில் இலங்கையின் 13 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
அதன் பின், 2013 இல் இடம்பெற்ற மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|