ரவிராஜ் கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டமையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தீபானி விஜேசுந்தர மற்றும் லலித் ஜயசூரிய ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரரான ரவிராஜின் மனைவியோ அல்லது அவர் சார்பான சட்டத்தரணியோ மன்றில் ஆஜராகாமையால் மனுவை நிராகரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் பிரதிவாதிகள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டதை ஆட்சேபித்து ரவிராஜின் மனைவி கடந்த 10 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதேவேளை, ரவிராஜின் படுகொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக சட்ட மா அதிபரால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|