ரயில் கடவை காப்பாளர்கள் போராட்டம்!
Tuesday, April 11th, 2017நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த ரயில் கடவை காப்பாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த போராட்டம் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு ரயில் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.ரொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
பண்டிகை கால கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும், ரயில்வே திணைக்கள சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து தாம் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கைகள் முன்வைத்த போதிலும், உரிய பதில் கிடைக்காததை அடுத்தே இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 1230 பேர் ரயில் கடவை காப்பாளர் பணிகளை நாள் சம்பளத்திற்கு முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் இந்த பணியை பாரிய சிரமத்திற்கு மத்தியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால், ரயில் கடவையை கடக்கும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
|
|