ரயிலில் மோதி நபரொருவர் பலி – அரியாலையில் சோகம்!

Sunday, February 7th, 2021

யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலில் மோதி நபரொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம், இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்களிலில் சென்றுகொண்டிருந்த குறித்த நபர், பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போதே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் என்ற 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts:

வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் - கஃபே அமைப்பு சுட்டிக்...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை – எம்.வீ எக்ஸ் - பிரஸ் பர்ள்” கப்பலினால் சமுத்திர சுற்றாடலுக்கு ஏ...
அமைச்சர்களாக பதவி வகித்துக்கொண்டு அரசாங்கத்தை தாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – போக்குவரத்...