யுக்ரைனிய சுற்றுலாப் பயணிகளின் நுழைவு அனுமதியினை நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம்!

மீள தாயகம் திரும்ப முடியாத நிலையில் உள்ள யுக்ரைனிய சுற்றுலாப் பயணிகளின் நுழைவு அனுமதியினை நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக யுக்ரைன் சுற்றுலா பயணிகள் இலங்கையில் தங்கியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக இன்று அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அழிந்துபோன தேசத்தினது இழப்புக்கள் அனைத்தையும் அர்த்பூர்வமான வகையில் மாற்றியமைக்க வேண்டும் - ஈ.பி.டி....
முஸ்லிம் தீவிரவாதிகள் மீதான தடை தொடரும் - பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர!
தற்போது நாடும் மக்களும் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர் - பிரதமர் கவலை!
|
|