யாழ். வலயத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

Thursday, June 2nd, 2016

யாழ். வலயத்திற்குட்பட்ட யாழ். சென் ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலை, யாழ். கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலயம், யாழ். நாவாந்துறை RCTMS ஆகிய மூன்று பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக யாழ். வலயத்தில் கடமையாற்றும் அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் சேவை வகுப்பு- 2, 3 ஐச் சேர்ந்த அதிபர்கள் விண்ணப்பிக்க முடியும்.  விண்ணப்பிக்கும் அதிபர்கள் தற்போது கடமையாற்றும் பாடசாலையில் மூன்று வருட சேவையைப் பூர்த்தி செய்திருப்பதுடன் விண்ணப்ப முடிவுத் திகதியான யூன் மாதம்- 9 ஆம் திகதியிலிருந்து நியமிக்கப்படும் பாடசாலையில் மூன்று வருட சேவையைப் பூர்த்தி செய்திருப்பதுடன், விண்ணப்ப முடிவுத் திகதியான யூன்-8 ஆம் திகதியிலிருந்து நியமிக்கப்படும் பாடசாலையில் மூன்று வருடங்கள் சேவையாற்றக் கூடிய வயதெல்லையைக் கொண்டிருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் பொதுநிர்வாகக் கிளையில் பெற்று எதிர்வரும்- 8 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: