யாழ் மாவட்ட கூட்டுறவு சபையால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு!

Thursday, June 14th, 2018

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபை 96 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழாவை கொண்டாடும் முகமாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

சர்வதேச கூட்டுறவு தின விழாவை ஒட்டி மாணவர்களிடையே கலைப்போட்டிகளும் கூட்டுறவுச் ச       ங்கப் பணியாளர்கள் மற்றும் அங்கத்தவர்களிடையே விளையாட்டு மற்றும் கலைப்போட்டிகளும் நடத்தப்படவுள்ளதுடன் 25 வருட சேவையை நிறைவு செய்த கூட்டுறவுப் பணியாளர்களை கௌரவிக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளது.

இவ் விழாவில் 2017 டிசம்பர் 31 ஆம் திகதி 25 வருட திருப்திகரமான சேவையைப் பூர்த்தி செய்த கூட்டுறவுப் பணியாளர்களின் சேவையை கௌரவிக்கும் முகமாக ஒரு கூட்டுறவுச் சங்கத்திற்கும் ஒருவர் வீதம் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

இக் கூட்டுறவுப் பணியாளர் கௌரவிப்புக்குரிய விண்ணப்பத்தினை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்பாக செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபை, வீரசிங்கம் கட்டிடத் தொகுதி 2 ஆம் மாடி இல.12, கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்புமாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவுச் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts: