யாழ் மாவட்டத்தில் 325  ஹெக்டேயர் நிலப்பரப்பில் திராட்சைப் பழச் செய்கை!

Friday, October 14th, 2016

யாழ் மாவட்டத்தில் 325  ஹெக்டேயர் நிலப்பரப்பில் திராட்சைப் பழச் செய்கை இம்முறை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. இம்முறை பல விவசாயிகள் இப் பழச் செய்கையில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஒரு கிலோ திராட்சைப்பழம் 270 ரூபா  முதல் 300 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஒரு நாளைக்கு 40 கிலோ திராட்சைப் பழம் வரை அறுவடை செய்யக் கூடியதாகத் தெரிவித்த வலிகாமத்தைச் சேர்ந்த திராட்சைப் பழச் செய்கையாளரொருவர் இதன் மூலம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா வரை வருமானமாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளதாகவும் கூறினார்.

தற்போது கடும் வெயில் காலம் நிலவுவதால் யாழ். மாவட்டத்தில் திராட்சைப் பழத்திற்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது.

14718668_1766320870296117_6834969446747095729_n

Related posts: