யாழ் மாவட்டத்தில் இம்முறை 8000 மெற்றிக்தொன் நெல் அறுவடையாகுமென எதிர்பார்ப்பு!

Thursday, February 23rd, 2017

யாழ் மாவட்டத்தில் இந்தவருடம் 8000  மெற்றிக்தொன் நெல் அறுவடை மூலம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வடக்கு மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்துள்ளார்.

குறித்த நெல் அறுவடை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் 10,419 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 18,500 விவசாயிகள் பெரும்போக நெற்பயிர்ச்செய்கை மேற்கொண்ட போதிலும் செப்ரெம்பர் ஒக்டோபர், நவம்பர் காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் எற்பட்ட வறட்சி காரணமாக 50 வீதமான நெற்பயிர்கள் பாதிப்படைந்தன. இதனால் கடந்த வருடம் பயிடப்பட்ட மொத்த நெல்லின் அரைவாசி வீதமே விவசாயிகளால் உற்பத்திவிளை பொருளாக கிடைக்கபெற்றுள்ளது.

இம்முறை எமது திணைக்களத்தின் மேற்பார்வையில் கீழ் இயங்கும் விதை நெல்கொள்வனவுசாலையில் இருந்து சிறப்பான நெல்விதைகளை (40%) விவசாயிகளிடம் இருந்து பெற்று அதனை களஞ்சிப்படுத்தி உரியபருவத்தில் விதைப்பதற்காக வழங்கப்படுவதன் மூலம் வருடம் 8,000 மெற்றிக்தொன் நெல் உற்பத்தியாக கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக வடமாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நெல்வயல்களின் அறுவடைகளின் பின்னர் சிறப்பான மண்ஈரப்பதன் காணப்படும் பட்சத்தில் சிறுதானிய வகையிலான பயறு, உழுந்து, கௌபி, போன்ற பயிர்கள் பயிரிடுவதற்காக விதைகளை விவசாயிகளுக்கு வழங்கவுள்ளோம். குறித்த பயிர்ச் செய்கையில் 70 வீதமான விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

640px-நெல்_அறுவடை_செய்யும்_விவசாயிகள்_படம்_2

Related posts: