யாழ். மாநகர சபையின் நிலையியல் குழுக்கள் நியமிக்கப்பட்டன!

Thursday, May 10th, 2018

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான நிலையியல் குழுக்களுக்கான உறுப்பினர்கள் மாநகரசபை அமர்வில் நியமிக்கப்பட்டனர்.

மாநகர சபைக்கான நிலையியல் குழுக்களாக நிதிக்குழு, பராமரிப்புக் குழு, சுகாதாரக் குழுக்களும் மேலதிகமாக இலஞ்சம், ஊழல் கண்காணிப்புக்குழு, பெண்கள், சிறுவர் விவகாரக்குழு, கல்வி மற்றும் விளையாட்டு சார்ந்த குழு என மொத்தமாக ஏழு குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுக்களுக்கும் ஆறு உறுப்பினர்கள் வீதம் நியமிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான நிதிக் குழுவில் முதல்வர் தலைமையில் உறுப்பினர்களான ஈசன், அருள்குமரன், கிருபாகரன், தனுஜன், திருமதி யோகேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பராமரிப்புக் குழுவில் உறுப்பினர்களான நித்தியானந்தன், மணிவண்ணன், ஜெயசீலன், திலீப், இளங்கோ, கிறேசியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். சுகாதாரக் குழுவில் உறுப்பினர்களான சிறில், தர்சானந்தன், பார்த்தீபன், கணேசராஜா, கிரிதரன், சத்தியசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். சமயம் மற்றும் கலாசாரம் சார்ந்த குழுவில் உறுப்பினர்களான பாலச்சந்திரன், சுபதிஸ், றிபாகிர், சுகந்தினி, குகேந்திரன், டேமியன் ஆகியோரும் இலஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களான தனேந்திரன், நளினா, விஜயதட்சாயினி, மயூரன், சாந்தரூபன், ராஜீவ்காந் ஆகியோரும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரகட குழுவில் உறுப்பினர்களான ராகினி, மதிவதனி, மேரி அஞ்சலா, அஜந்தா, சுபாஜினி, ஜெயந்தினி ஆகியோரும் கல்வி மற்றும் விளையாட்டுக் குழுவில் குலேந்திரராஜா, நியாஸ், ஜெனன், பத்மமுரளி, செல்வவடிவேல், அனுசியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Related posts: