யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புனரமைக்கப்படாத நிலையிலுள்ள வீதிகளைப் புனரமைக்க நடவடிக்கை!

யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சில வீதிகளை விரைவாகப் புனரமைப்பதற்கு மாநகர சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.
இதற்கெனப் புனரமைக்கப்படாத வீதிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன் புனரமைக்கப்படாத சிறு வீதிகள், வீதிகளை தார் ஊற்றி புனரமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாரி காலத்திற்கு முன்பாகக் குறித்த வீதிகள் புனரமைக்கப்படும் என்றார்.
Related posts:
viber பயன்ப்படுத்துவோரின் கவனத்திற்கு!
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம்!
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை 18 ஆம் திகதிவரை நீடிப்பு!
|
|