யாழ்.மாநகரில் நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி!

Wednesday, February 1st, 2017

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் அமைந்த நல்லூர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும்  பணிகள் ஆம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகரசபை சுகாதார மருத்தவ அதிகாரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்று புதக்கிழமை மூத்த விநாயகர் சனசமூக நிலையம், ஆசீர்வாதப்பர் வீதி – சுகாதார கல்விமையம், நாயன்மார் வீதி சுகாதார கல்விமையத்திலும், நாளை வியாழக்கிழமை யாக்கோவா பாலர் பாடசாலை, வெளிலுகந்த பிள்ளையார் கோவிலடி, செம்மணி வீதி, கடுக்காய் வீதியிலும், சாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை வீதி, உயர் கலைக் கல்லூரி அருகாமைஈ அரசடி ஜனசக்தி ச.ச நிலையத்திலும் வழங்கப்படும்.

எதிர்வரும் 6ஆம் திகதி பழம் வீதி ஞானசோதி சனசமூக நிலையம், சிவக் பத்து வீதி மணல்தறை லேனிலும், 7ஆம் திகதி ஜமுனா வீதி, சுகாதார மையம், சங்கிலியன் மன்றம், பருத்தித்துறை வீதி, செட்டியர் தோட்டம் பகுதியிலும் , 8ஆம் திகதி வைமன் வீதி எடிசன் அக்கடமி அருகாமை, அம்மன் வீதி, முத்தமிழ் முன்பள்ளி – ஆடியபாதம் வீதியிலும், 9ஆம் திகதி சங்கிலியன் வீதி, கொண்டலடிச்சந்தி கோவில் வீதி – பண்டாரக் களுத்திலும், 1சூஆம் திகதி செட்டித்தெரு நல்லூர் முருகள் சனசமூக நிலையம், நல்லூர் முருகன் சனசமூக நிலையம், நல்லூர் குறுக்குத்தெருச் சந்தி, கைலா பிள்ளையார் கோவிலடி, 14ஆம் திகதி பண்டாரக்குளம், கொண்டலடியிலும், 15ஆம் திகதி சட்டநாதர் கோயிலடி நடமாடும் சேவை மூலம் அனைத்துப் பகுதியிலும் தடுப்பு மருந்து ஏற்றப்படும் என்றார்.

SL-spends-Rs-500-mln-every-year-to-control-rabies-600x270

Related posts: