யாழ்.மத்தியூஸ் வீதியிலுள்ள குளக் கரையில் கொட்டப்படும் கழிவுகளால் நோய்த்தொற்றுப் பரவும் அபாயம்!

Sunday, September 4th, 2016

யாழ். மத்தியூஸ் வீதியில் அமைந்துள்ள குளக்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் அருகிலுள்ள வணக்கஸ்தலம், பாடசாலை என்பன பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோய்த்தொற்றும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குளக்கரையில் அதிகளவான குப்பைகள் கொட்டப்படுவதையும் கொட்டப்படும் குப்பைகள் தேங்கியிருப்பதையும் காணமுடிகின்றது. குளத்து நீரில் கழிவுகள் மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகின்றது.

குளத்திற்கு அருகாமையில் புனித பற்றிரிசியன் கல்லூரியும் புனித மரியன்னை தேவாலயமும் காணப்படுகின்றன.

இந்நிலையில் குளம் கவனிப்பாரற்று கிடப்பதால் குளத்தின் அருகிலுள்ள பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் நோய்க் கிருமிகள்தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளதென மக்கள் தெரிவிக்கின்றனர்.

unnamed (4)

Related posts: