யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் முதியவரின் சடலம்: பொறுப்பேற்குமாறு கோரிக்கை

Wednesday, February 15th, 2017

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் சடலமொன்றுள்ள நிலையில் உரியவர்களை வந்து பொறுப்பேற்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம்- 29 ஆம் திகதி காலை சு.ஆறுமுகம் என்ற முதியவர் வவுனியாவைச் சேர்ந்த நபரொருவரால் யாழ்.போதனா வைத்தியசாலையின் 24 ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அன்றிலிருந்து உறவினர்கள் எவரும் அவரைப் பாரக்க வரவில்லை. இந் நிலையில் குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்றுத் திங்கட்கிழமை(13)அதிகாலை உயிரிழந்தார்.

குறித்த சடலம் இதுவரை எவராலும் உரிமை கோராத நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் சடலத்தைப் பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுள்ளார்.

Related posts: