யாழ். புத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக தனக்குத் தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் ஐந்து நாட்களின் பின் உயிரிழப்பு!

யாழ். புத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக தனக்குத் தானே தீ மூட்டித் தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண்ணொருவர் ஐந்து நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றுச் செவ்வாய்க்கிழமை(17-05-2016) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் மேற்கு கலைமதி பகுதியினை சேர்ந்த மகேந்திரன் உஷாந்தினி வயது-22 என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது ,
இவர் கடந்த ஆறுமாதங்களாக அதேயிடத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரைக் காதலித்துக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரையே திருமணம் முடித்தார்.
திருமணத்தின் பின் தாய் வீட்டில் வாழ்வதா? அல்லது கணவனின் வீட்டில் வாழ்வதா? என்ற குடும்பப் பிரச்சினை கணவன் மனைவி ஆகியோருக்கிடையில் இருந்து வந்துள்ளது. இதனால் 17 நாட்களாக அவரவர் வீட்டிலேயே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற தினம் கணவனின் வீட்டுக்குச் சென்று விட்டுத் தாய்வீட்டுக்கு திரும்பியவரை கணவன் வீட்டிற்கு ஏன் சென்று விட்டு வந்தாய்? என அவரது தாய் கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட அவர் தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார். எனினும், உடனடியாகக் காப்பாற்றப்பட்ட பிரஸ்தாபக் குடும்பப் பெண் முதலில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் அதிகாலை-5 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டார் . சட்டவைத்திய அதிகாரியினால் உடற்கூற்றுப் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டதனையடுத்துச் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அச்சுவே
Related posts:
|
|