யாழ்.பல்கலை வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Wednesday, March 9th, 2022

யாழ்.பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தினால் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினூடாக நடாத்தப்படும் தமிழ் மொழி மூலமான மூன்று வருட கால வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் விண்ணப்ப முடிவுத்திகததி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்களை யாழ்.பல்கலை கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அ்அல்லது www.codl.JCB.ac.kks எனும் இணையத்தளத்தில் பதிவிறக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப மற்றும் பரீட்சை கட்டணமாக ஆயிரம் ரூபாவை  050122150001411 என்ற மக்கள் வங்கி கணக்கிலக்கத்திற்கு செலுத்தி, பற்றுசீட்டினை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் என்றும் அறிவறுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை நேரடியாக திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்திலையோ அல்லது பிரதி பதிவாளர், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம், யாழ்ப்பாண பல்கலைகழகம், திருநெல்வேலி எனும் முகவரிக்கு, தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் “வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு – 2020/2021 என குறிப்பிட்டு, பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும் என்றும் மேலதிக விபரங்களுக்கு 021 222 3612 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பேச முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: