யாழ்.பல்கலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம்: மேலும் மூன்று தமிழ் மாணவர்களிடம் விசாரணை!

Tuesday, July 26th, 2016

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று தமிழ் மாணவர்களிடம் விசாரணை செய்வதற்காகப் பொலிஸாரால் தகவல் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிங்கள மாணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே குறித்த மாணவர்கள் விசாரணை செய்யப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.

மேற்படி மாணவன் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கோப்பாய்ப் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாணவர் ஒன்றியத் தலைவர் அண்மையில் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிப் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் உடனடியாக கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் - கூட்டுறவு அபி...
யாழ்ப்பாணம் ,நல்லூர் ,வேலணை பகுதிகளில் பியர் நுகர்வு 27% மாக குறைவடைந்துள்ளதாக மதுவரி திணைக்களம் தக...
போக்குவரத்து சீரின்மை - கால தாமதமாக வருகை தரும் மாணவருக்கு சலுகை வழங்க வேண்டும் - அனைத்து பாடசாலை அத...

அடுத்த வருடம் புதிய 10 ஆயிரம் புதிய தொழில்வாய்ப்புக்கள் நாட்டிற்குக் கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர்...
முடக்க நிலை நீக்கப்பட்டாலும் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் - இராணுவ தள...
அரசியல் கூட்டங்களால் கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது - பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை!